வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய பிரதமச் செயலாளர்கள் நியமனம்

வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக எல். இளங்கோன் மற்றும் வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று (12) கையளித்தார்.

இலங்கை நிர்வாகச் சேவையின் தலைசிறந்த அதிகாரியான எல்.இளங்கோவன் வடக்கு மாகாண அமைச்சுக்கள் பலவற்றின் செயலாளர் பதவி வகித்ததுடன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகும் பணியாற்றியுள்ளார்.

எல்.இளங்கோவன் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக நியமனம் பெறும் வரை, வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.