பலியா:உத்தர பிரதேசத்தில், காணாமல் போன 17 வயது சிறுமி, 10 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டார். அவரைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
உ.பி., மாநிலம் பலியாவைச் சேர்ந்தவர் சர்பராஸ் அன்சாரி, 19. கடந்த 3ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்றார்.
சிறுமியின் தாத்தா, அன்சாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசில் புகார் செய்தார். அன்சாரி அவரது சகோதரர், சகோதரி மற்றும் இரண்டு மாமாக்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், ரகசிய தகவல் அடிப்படையில், சுரைமான்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று சிறுமியை மீட்டனர். அந்தச் சிறுமியுடன் இருந்த அன்சாரியும் கைது செய்யப்பட்டார்.
கடந்த 10 நாட்களாக சிறுமியை பாலியல் பலாத்காரக் செய்த அன்சாரி மீது போக்சோ சட்டப் பிரிவிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement