வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் 8 உள்ளூர் ரயில்நிலையங்களின் பெயர்களை மாற்ற அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் சிவசேனா- பா.ஜ., கூட்டணி ஆட்சியில் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே உள்ளார். இவரது தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே ஆகியவற்றின் கீழ் இயங்கி வரும் மும்பையில் பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் இருந்த 8 ரயில் நிலையங்களின் பெயர்களை மாற்ற முடிவு செய்து அதற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி :
1) கரி ரோடு ஸ்டேஷன்: லால்பாக்.
2) சாந்துர்ஸ்ட் ரோடு ஸ்டேஷன்: டோங்கிரி.
3) மெரிலைன் ஸ்டேஷன்: மும்பா தேவி.
4) சார்னிரோடு ஸ்டேஷன்: ஜிர்கோன்.
5) காட்டன் கிரீன் ஸ்டேசன்: காலா செளக்கி.
6)டெக்யார்டு ஸ்டேஷன்: மஸ்கோன்.
7)கிங்ஸ் சர்க்கிள் :திரிதங்கர் பர்ஷ்வநாத்.
8)மும்பை மத்திய ரயில்நிலையம்: நானா ஜெகன்னாத் ஷங்கர்சேத்.
என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இதற்கான ஒப்புதல் மத்திய உள்துறை மற்றும், ரயில்வே அமைச்சகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement