பெலகாவி, : நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் தகராறில், பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக ஒன்பது பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
பெலகாவி, ராய்பாக் கங்கனவாடி கிராமத்தில் வசிப்பவர் நாகப்பா, 35; விவசாயி. இவரது மனைவி மஞ்சுளா, 32. நாகப்பாவின் வயலின் அருகில், ஹாலப்பா என்பவரின் வயல் உள்ளது.
நிலத்தை ஒட்டி ஓடும், ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, நிலத்திற்கு பாய்ச்சுவது தொடர்பாக, நாகப்பா, ஹாலப்பா இடையில் பிரச்னை இருந்தது.
இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகப்பாவை, ஹாலப்பா தாக்கினார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். நேற்று முன்தினம் இரவு நாகப்பாவின் மனைவி, இரு பிள்ளைகள், வீட்டில் துாங்கி கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் வீட்டின் மீது, கல் வீசப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா வெளியே வந்து பார்த்த போது, ஹாலப்பா உட்பட ஒன்பது பேர் சேர்ந்து, மஞ்சுளாவை கொடூரமாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்தவர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
புகாரின்படி ஹாலப்பா உட்பட ஒன்பது பேர் மீதும், ராய்பாக் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement