பெங்களூரு : பெங்களூரில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்யும்படி வலியுறுத்தி, பா.ஜ.,வினர் காலி குடங்களுடன் நேற்று போராட்டம் நடத்தினர்.
வறட்சி காரணமாகவும், போர்வெல்களில் தண்ணீர் வற்றியதாலும், பெங்களூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குடியிருப்பு வாசிகளுக்கு மட்டுமின்றி, தொழிற்சாலைகள், நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனைகள் என பலரும் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.
இதை கண்டித்து, பெங்களூரு சுதந்திர பூங்காவில் பா.ஜ., – எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் உட்பட பிரமுகர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
மகளிர் பிரிவினர், குடங்களுடன் நடு ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாநில காங்கிரஸ் அரசின் நிர்வாக சீர்கேடால் தான், தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.
பின், மாநில பொது செயலர் நந்தீஷ்ரெட்டி தலைமையிலான பா.ஜ., குழு, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகரை சந்தித்து, தண்ணீர் பிரச்னையை விரைவில் தீர்த்து வைக்கும்படி வலியுறுத்தி மனு அளித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement