சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தேர்தல் நடந்தது. சென்ற முறை பதவிக்கு வந்தவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து இந்த வருடம் தேர்தல் நடந்தது. எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடக்கும் இயக்குநர் சங்க தேர்தல் இம்முறை எந்தவித பரபரப்புமின்றி நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்ளிட்ட இயக்குநர்கள் போட்டியிட்டனர்.
