யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான செயலமர்வு

யாழ். பாதுகாப்பு படைத் தலைமயக வளாகத்தில் 11 மார்ச் 2024 அன்று பேராசிரியர் டேவிட் பரூஸ்டர், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் கேணல் அமந்தா ஜான்ஸ்டன், மற்றும் அவுஸ்திரேலிய கடற்படையின் பெட்டர்மேன் கெப்டன் சைமன் ஆகியோருடன் இணைந்து ஒரு நாள் பயிற்சியை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘தற்கால உள்நாட்டு மற்றும் சர்வதேச பாதுகாப்பு பிரச்சினைகள்’ என்ற தொனிப்பொருளில் இந்த செயலமர்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்செயலமர்வு அனைத்து அதிகாரிகளுக்கும் சமகால பாதுகாப்பு விடயங்களில் அவர்களின் அறிவை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியதுடன், பங்கேற்பாளர்கள் கலந்துரையாடலில் ஆர்வத்துடன் பங்குகொண்டனர்.

நிகழ்வின் முடிவில், யாழ் தளபதி, சிறப்புரையாற்றியதுடன் விரிவுரையாளர்களுக்கு பாராட்டுச் சின்னமாக சிறப்பு நினைவுச் சின்னங்களை வழங்கினார். பின்னர் அவர்கள் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமான விஜயமொன்றை மேற்கொண்டனர்.

51 மற்றும் 52 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த செயலமர்வில் பங்குபற்றினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.