திண்டுக்கல் மாவட்டம், மாரம்பாடி அந்தி பெரியகுளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணி தாஸ் என்பவரது மகன் பாஸ்கர் (33). இவர், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மீரட் ராணுவ மருத்துவ முகாமில் அவசர ஊர்தி உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், விடுமுறையில் சொந்த ஊர் திரும்புவதற்காக சண்டிகரில் இருந்து மதுரை நோக்கி வரும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வண்டியில் வந்தார். ரயில் சுமார் 11:30 மணியளவில் கரூர் வந்தடைந்தது.

கரூர் ரயில் நிலையத்தில் நடைபாதை உள்ளிட்ட பல்வேறு புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது, இதனால் அடையாளம் தெரியாமல் திண்டுக்கல் ரயில் நிலையயம் வந்துவிட்டதாக தவறாக நினைத்து, ராணுவ வீரர் பாஸ்கர் திடீரென இறங்கியுள்ளார். பின்னர், ‘அது திண்டுக்கல் ரயில் நிலையம் இல்லை. கரூர் ரயில் நிலையம்’ என்பது தெரியவந்ததால், பதட்டமடைந்த அவர் மீண்டும் ரயிலில் ஏற முயன்றுள்ளார். அப்போது, ரயில் புறப்பட்ட நிலையில் ஓடும் ரயிலில் அவர் ஏற முயற்சித்த போது தவறி ரயில் தண்டவாளத்திற்குள் விழுந்தார். இது குறித்து, ரயில் பெட்டியில் பயணித்த பயணிகள் எழுப்பிய சத்தத்தால், ரயில் நிறுத்தப்பட்டு ராணுவ வீரரை மீட்க முயற்சித்த போது, அவர் தலை துண்டாகி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கரூர் இருப்பு பாதை ரயில்வே போலீஸார் அவரின் உடலை கைப்பற்றி, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, கரூர் இரும்பு பாதை ரயில் நிலைய காவல் நிலையை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், அவரது உடல் இன்று கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

மேலும், சண்டிகரில் உள்ள ராணுவ பிரிவுக்கு, தகவல் அளிக்கப்பட்டுள்ளதால், நான்கு பேர் கொண்ட இராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்திட, கரூர் வருகை தர உள்ளனனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னரே, ராணுவ மரியாதையுடன் உயிரிழந்த ராணுவ வீரர் பாஸ்கர் உடல் அடக்கம் செய்யப்படுவது குறித்து தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. ராணுவ வீரர் சொந்த ஊருக்கு விடுமுறைக்காக திரும்பிய போது கரூர் ரயில் நிலையத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம், அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY