BS Yediyurappa Says Sex Assault Charges Baseless, Questions Timing Of FIR | எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு: ஆதாரமில்லை என மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு ஆதரமில்லை எனக்கூறியுள்ள எடியூரப்பா, தேர்தல் ஆதாயத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.

பெங்களூருவின் சதாசிவ நகர் போலீஸ் ஸ்டேசனில், பெண் ஒருவர், மோசடி வழக்கு தொடர்பாக உதவி கேட்க சென்ற தனது 17 வயது மகளுக்கு, கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜ, மூத்த தலைவருமான எடியூரப்பா பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக எடியூரப்பா கூறியதாவது: லோக்சபா தேர்தல் நெருங்க உள்ளதால் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. உதவி கேட்டு வந்த பெண்ணுக்கு நிதியுதவி அளித்தேன். மோசடி வழக்கு தொடர்பாக அவர் உதவி கேட்டு வந்தார். ஆனால், சரியாக அவர் எந்த விவரமும் தெரிவிக்கவில்லை. இதனால், மனநிலை சரியில்லாதவராக இருக்கலாம் என அவர் மீது சந்தேகம் வந்தது இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.