Dismissal of petition seeking investigation into irregularities in voting machine | ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

புதுடில்லி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செயல்பாட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகார் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செயல்பாட்டில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி, நந்தினி சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செயல்பாட்டில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனர். தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செயல்பாடு தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்த மனுவை இந்த நீதிமன்றம் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளது.

இன்னும் எத்தனை மனுக்களை பரிசீலிக்க வேண்டும்.

சமீபத்தில் கூட யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை சரிபார்க்க உதவும் ஒப்புகைச் சீட்டு தொடர்பான மனுவை விசாரித்தோம். ஒவ்வொரு முறையிலும் சாதக மற்றும் பாதகமான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.