புதுடில்லி:விவசாயத் துறை தொடர்பான மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் நடத்திய ‘மகா பஞ்சாயத்து’ கூட்டம் காரணமாக மத்திய டில்லி மற்றும் சராய் காலே கான் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் நத்தை வேகத்தில் நகர்ந்ததால், ஐ.டி.ஓ., டில்லி கேட், தர்யாகஞ்ச், தேசிய நெடுஞ்சாலை 24ல் சராய் காலே கான் அருகே உள்ள சுற்றுப்புற பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, மாற்றுவழிகள், தவிர்க்க வேண்டிய சாலைகள் குறித்து நேற்று முன்தினமே நகரவாசிகளுக்கு போக்குவரத்து காவல் துறை சார்பில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. எனினும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியவில்லை.
காரக் சிங் மார்க், மின்டோ சாலை, அசோகா சாலை, மகாராஜா ரஞ்சீத் சிங் மேம்பாலம், கன்னாட் சர்க்கஸ், பவ்பூதி மார்க், DDU மார்க் மற்றும் சமன் லால் மார்க், டில்லி கேட், மிர் தார்த் சௌக், அஜ்மேரி கேட் சௌக், குருநானக் சௌக், கமலா மார்க்கெட் சாலை.
பஹர்கஞ்ச் சௌக், ரவுண்டானா ஜாண்டேவாலன், மகாராஜா ரஞ்சீத் சிங் மேம்பாலம் பாரகாம்பா சாலையில் இருந்து குருநானக் சௌக், ஜன்பத் சாலை வரை, டால்ஸ்டாய் மார்க் கிராசிங், கேஜி மார்க் கிராசிங் மற்றும் ரவுண்டானா ஜிபிஓ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
நகரவாசிகள் மேற்கூறிய சாலைகளை தவிர்க்கும்படியும் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க மெட்ரோ ரயிலை பயன்படுத்தவும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியிருந்தனர்.
இதனால் மெட்ரோ ரயிலில் நேற்று கடுமையான பயணியர் கூட்டம் இருந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement