
‛ஆடுஜீவிதம்' படத்திற்காக 4 மொழிகளில் டப்பிங் பேசிய பிரித்விராஜ்
பிரித்விராஜ் நடிப்பில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் என மிக நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்த ஆடுஜீவிதம் திரைப்படம் வரும் மார்ச் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. பிளஸ்சி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார். பென்யமின் என்பவர் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற நாவலை தழுவி இந்த படம் உருவாகி உள்ளது. இதில் அரபு நாட்டில் ஒட்டகம் மேய்க்கும் நபராக நடித்துள்ளார் பிரித்விராஜ்.
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் ஒரு பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்திலேயே லைவ் ரெக்கார்டிங் முறை பயன்படுத்தப்பட்டு வசனங்கள் லைவ் ஆக பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் தனது கதாபாத்திரத்திற்கு பிரித்விராஜே டப்பிங் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “ஒரு முறை உயிரோடு வாழ்ந்த இடத்திற்கு நான்கு முறை மறு விசிட் அடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது” என்று கூறியுள்ளார்.