புதுடில்லி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து, நம் நாட்டுக்குள் அகதிகளாக வந்த குறிப்பிட்ட சில பிரிவினருக்கு, குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம், சமீபத்தில் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், இந்த சட்டத்தை அமல்படுத்தியதை தடுத்து நிறுத்தக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட பலர் மனு தாக்கல் செய்துஉள்ளனர்.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தக்கோரி நேற்று உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முறையிட்டார். அப்போது இந்த மனுவை அவசரமாக விசாரிக்கும்படி அவர் வாதிட்டார்.
இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “இச்சட்டத்துக்கு எதிராக 190க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன; அவை அனைத்தும், வரும் 19ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்,” என்றார்.
அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் தலைமை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த சட்டத்தை எதிர்க்க மனுதாரர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை,” என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘அரசின் எந்த ஒரு சட்டத்தையும் நிறுத்தி வைக்கும்படி இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. இது தொடர்பான அனைத்து மனுக்களும், 19ல் விசாரிக்கப்படும்’ என, உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement