
நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம்
தமிழில் ‛சைத்தான், கன்னி ராசி, ஆயிரம் பொற்காசுகள்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அருந்ததி நாயர். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். திருவனந்தபுரத்தில் வசித்து வரும் இவர், கோவளம் சாலையில் தனது சகோதரர் உடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாகனம் ஒன்று மோதியதில் அருந்ததி மற்றும் அவரது சகோதரர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து மூன்று தினங்களுக்கு முன்னர் நடந்தது. தற்போது தான் இது வெளியே தெரிய வந்துள்ளது.
இதுபற்றி அருந்ததியின் சகோதரி ஆர்த்தி வெளியிட்ட பதிவில், ‛‛மூன்று நாட்களுக்கு முன் விபத்து ஒன்றில் அருந்ததி பலத்த காயமடைந்து உயிருக்காக போராடி வருகிறார். திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து ஐசியுவில் வென்டிலேட்டர் உதவி உடன் சிகிச்சை பெற்று வருகிறார்'' என தெரிவித்துள்ளார்.