Rs.240 Crore for Grandson : Infosys Narayana Murthy Prize | பேரனுக்கு ரூ.240 கோடி : இன்போசிஸ் நாராயண மூர்த்தி பரிசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, தன் பேரனுக்கு 240 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பரிசாக வழங்கி, அவரை இந்தியாவின் இளைய கோடீஸ்வரராக மாற்றியுள்ளார்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் கடந்த 1981ம் ஆண்டு, கிட்டத்தட்ட 20,750 ரூபாய் முதலீட்டுடன் துவக்கப்பட்டது.
இதன் நிறுவனர் நாராயண மூர்த்தி, இவர் தன் நான்கு மாத வயதுடைய பேரன் ஏகாகிரஹ் ரோஹன் மூர்த்திக்கு, 240 கோடி ரூபாய் மதிப்பிலான, 0.04 சதவீத்திற்கு சமமான 15 லட்சம் பங்குகளை பரிசாக அளித்துள்ளார். இதன் வாயிலாக, ஏகாகிரஹ் இந்தியாவின் இளம் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.

இன்போசிஸ் நாராயண மூர்த்தி தற்போது, 0.36 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். இது இவரின் முந்தைய பங்கான 0.40 சதவீதம் அதாவது, 1.51 கோடி பங்குகளை விட குறைவானதாகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.