நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் குணச்சித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார் நடிகை தீபா. இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், 'எங்களை யாராவது ஏமாற்றி விட்டால் அவர்களுக்காக காத்திருக்க வேண்டுமா? ஆண்களுக்கு மட்டும் தான் உணர்ச்சியா? எங்களுக்கு கிடையாதா? இளம் வயதில் கணவரை இழந்த பெண் யாருடனாவது போய்விட்டால் அவளுக்கு ஒரு பட்டம் சூட்டி வாழ்க்கையை முடித்துவிடுகிறார்கள்.

நீங்கள் ஏன் அவளுக்கு மறுமணம் செய்து வைக்கவில்லை. நாங்கள் பாடக்கூடாது, ஆடக்கூடாது, சிரிக்கக்கூடாது. அப்படி செய்தால் உங்களுக்கு கவுரவ குறைச்சல். நாங்கள் தாசிகள் என்றால், எங்களை அந்த நிலைக்கு மாற்றிய நீங்கள் யார்? ஊரில் கரகாட்டக்காரியை ஆட சொல்லி ரசிக்கும் நீங்கள் யார்? நாங்கள் தாசிகளாக இருந்தாலும் எங்கள் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கிறோம். உங்களை போல் குடித்துவிட்டு ஊரை அழிக்கவில்லை' என்று பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.