சென்னை: இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. கடந்த 1976ம் ஆண்டில் அன்னக்கிளி படத்தில் மச்சானப் பாத்தீங்களா என துவங்கிய இவரது பயணம் 47 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வருகிறது. பத்ம பூஷன், பத்ம விபூஷன் என உயரிய விருதுகளை பெற்றுள்ள இளையராஜா, தலைமுறைகளை கடந்து தன்னுடைய இசையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போதைய இளைஞர்களின்
