சென்னை: இசைஞானி, மேஸ்ட்ரோ என்று தன்னுடைய ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. தமிழில் அன்னக்கிளி படம் மூலம் பஞ்சு அருணாசலத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இளையராஜாவிற்கு அடுத்தடுத்த படங்கள் வெற்றியாகவே அமைந்தன. அவரது பாடல்களுக்காகவே ஓடி வெற்றிகளை குவித்த படங்கள் அதிகம். தன்னுடைய 47 வருட திரைத்துறை பயணங்களில் பல வித்தியாசமான முயற்சிகளை முன்னெடுத்து அதை சக்சஸாகவும் மாற்றியுள்ளார்.
