கிளாமரை ஏற்றும் 'பேஷன் பேபி' சமந்தா

தமிழில் அதிகப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சென்னையைச் சேர்ந்தவர் என்பதால் சமந்தா மீது ரசிகர்களுக்கு ஒரு அபிமானம் உண்டு. தெலுங்கில் சில பல சூப்பர் ஹிட்களில் நடித்த சமந்தா அடுத்து ஹிந்திப் பட உலகை டார்கெட் செய்ய ஆரம்பித்துள்ளார்.

ஹிந்தி வெப் தொடரான 'தி பேமிலி மேன் சீசன் 2' மூலம் ஹிந்தி ரசிகர்களிடமும் பிரபலமானார். அடுத்து 'சிட்டாடல் – ஹனி பன்னி' வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடரை அடுத்து ஹிந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி உள்ளாராம். ஏற்கெனவே மும்பையில் தனக்கென ஒரு குழுவை நியமித்துள்ளதாகத் தகவல். அவர்கள் சமந்தாவிற்கான ஹிந்தி புராஜக்ட்களை நிர்வகிப்பார்கள் என்றும் தகவல் உள்ளது.

அவர்கள் ஆலோசனையின்படி தான் சமந்தா தற்போது தனது திரையுலகப் பயணத்தைத் தொடர்கிறார் என்கிறார்கள். நேற்று சமந்தா வெளியிட்ட சில புகைப்படங்கள் அதற்கு உதாரணம். கிளாமரை ஏற்றி அசத்தலான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவற்றைப் பார்த்து 'பேஷன் பேபி' என கமெண்ட் செய்துள்ளார் நடிகை எமி ஜாக்சன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.