போதை, ரத்தம் இல்லா குடும்ப படம் 'ஜெனி'

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் படம் 'ஜெனி'. இதனை மிஷ்கின் உதவியாளர் அர்ஜுனன் இயக்குகிறார். ஜெயம் ரவி, கல்யாணி பிரியதர்ஷன், கிர்த்தி ஷெட்டி, வாமிகா கபி மற்றும் தேவயானி ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. இது அலாவுதீன் அற்புதவிளக்கு கதையை நினைவுபடுத்துவதாக உள்ளது. மந்திர குவளை, பூதத்தின் தோற்றத்தில் ஜெயம்ரவி, சுற்றிலும் தேவதைகள் போன்று ஹீரோயின்கள் ஆகியவை இடம் பிடித்துள்ளனர். ஆனால் இது அம்மா, மகள், மனைவி சகோதரியை சுற்றிய அழகான குடும்ப படம் என்கிறார் இயக்குனர் அர்ஜுன்.

அவர் இதுகுறித்து மேலும் கூறும்போது “ஜெயம் ரவியுடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. குடும்பம் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு ஆக்ஷன், மகிழ்ச்சி, எமோஷன் போன்ற விஷயங்கள் கலந்து 'ஜெனி' உருவாகி இருக்கிறது. படம் வலிமையான பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்டது. ஒரு தாய், மகள், சகோதரி மற்றும் மனைவியின் உணர்ச்சிகளை சுற்றி படம் இருக்கும். வன்முறை, போதைப்பொருள் மற்றும் ரத்தம் இதெல்லாம் இல்லாமல் மகிழ்ச்சியான ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுப்பதுதான் படத்தின் நோக்கம். கிட்டத்தட்ட 75 சதவிகித படப்பிடிப்பை முடித்துள்ளோம். இன்னும் 3 பாடல்கள் உள்ளன. அதோடு படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து விடும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.