இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஸ்டார்’. சாமானிய இளைஞன் அசாத்தியக் கனவுகளை நோக்கிப் பயணிப்பதுதான் இதன் கதைக்களம்.
சினிமாவில் பெரிய ஸ்டாராக வேண்டும் என்ற கனவை விடாமல் துரத்தும் கதாபாத்திரத்தில் கவின் நடித்திருக்கிறார். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் இளனின் தந்தை ஸ்டில்ஸ் பாண்டியன், “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்’ என்பது வள்ளுவரின் வாக்கு. இந்த குறளுக்கேற்ப என்னைப் பெருமைப்படுத்தியுள்ளார் என் மகன் இளன்” என்றும் “சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற என் கனவை என் மகன் நிறைவேற்றிவிட்டான்” என்றும் பெருமிதத்துடன் பேசியிருந்தார். இப்படமும் நடிகனாக வேண்டும் என்ற பெருங்கனவுடன் இருந்த பாண்டியன் வாழ்கையிலிருந்து இன்ஸ்பைர் ஆனதுதான் என்று இயக்குநர் இளனும் நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார்.
ஸ்டார் நாளை முதல் ⭐️
I dedicate this movie to my dad “STILLS PANDIAN”
Humble request : please don’t reveal the 3 pleasant surprises from #STAR once you watch it tomorrow. Artist in me badly wants everyone to experience by themselves Thankyou ❤️ #STARMOVIE pic.twitter.com/p7D1zhkaxa
— Elan (@elann_t) May 9, 2024
இந்நிலையில் ‘Star’ படம் நாளை (மே10ம் தேதி) திரையரங்குகளில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகவிருக்கிறது. இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் இளன், “‘Star’ படம் நாளை முதல் திரைக்கு வருகிறது. இப்படத்தை என் அப்பா ‘ஸ்டில்ஸ் பாண்டியன்’ அவர்களுக்கு அர்பணிக்கிறேன். இப்படத்தில் மூன்று முக்கியமான சர்ப்ரைஸ் காட்சிகள் இருக்கின்றன. அதை மட்டும் தயவு செய்து வெளிப்படுத்திவிட வேண்டம். எனக்குள் இருக்கும் கலைஞன், ஒவ்வொருவரும் தாங்களாக அனுவித்து இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான்”என்று பதிவிட்டுள்ளார்.