லைசன்ஸ் கேட்ட காவலரிடம் சைலன்ட்டாக சட்டையை இறக்கி காண்பித்த பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

நியூயார்க்,

அமெரிக்காவின் டென்னஸ்சி மாகாணத்தில் நாஷ்வில்லே நகரில் வாகன சோதனை ஒன்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து காவலர் ஒருவர் வாகனங்களை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, கார் ஒன்று வந்தது. அதனை காவலர் நிறுத்தினார். ஓட்டுநர் பகுதியில் இருந்த பெண்ணிடம் 45 கி.மீ. வேகத்தில் போக வேண்டிய இடத்தில் 65 கி.மீ. வேகத்தில் சென்றிருக்கிறீர்கள். உங்களுடைய வாகன உரிமம், வாகன பதிவு உள்ளிட்டவற்றுக்கான ஆவணங்களை காண்பியுங்கள் என கூறியுள்ளார்.

அதற்கு அந்த பெண், சரியான ஆவணங்கள் எதுவும் இல்லை என கூறி விட்டு, மேலாடையை கீழே இறக்கி காண்பித்திருக்கிறார்.

அதற்கு அந்த காவலர், இது 2024-ம் ஆண்டு. இதனை நான் இன்டர்நெட்டில் எந்த நேரமும் பார்க்க முடியும் என கூறுகிறார். உடனே அந்த பெண், ஏன் நீங்கள் அவற்றை தொட்டு பார்க்க கூடாது? என கேட்கிறார்.

அந்த அதிகாரியும் அதற்கு ஒப்பு கொள்கிறார். இதனையடுத்து, தள்ளி நின்ற காவலர் காரை நெருங்கி, அந்த பெண்ணின் மார்பகங்களை பிடிக்கிறார். அதன்பின்பு, எச்சரிக்கையுடன் உங்களை செல்ல அனுமதிக்கிறேன் என காவலர் கூறுகிறார். அந்த பெண்ணும் காவலருக்கு நன்றி கூறுகிறார்.

இதனை பயணிகளுக்கான இருக்கையில் அமர்ந்திருந்த நபர் வீடியோவாக படம் பிடித்திருக்கிறார். அவர்களை எச்சரித்த காவலர், பின்னர் போகும்படி கூறி விட்டு நடந்து செல்கிறார்.

அந்த வீடியோவில் காவலரின் முகம் காட்டப்படவில்லை. ஆனால், பெருநகர நாஷ்வில்லே காவல் துறை என்பதற்கான அடையாளம் காவலரின் தோள் பகுதியில் காணப்பட்டு உள்ளது. இந்த வீடியோ பற்றி தெரிய வந்ததும், உடனடியாக காவல் துறை விசாரணை நடத்தியது.

இதில், சீன் ஹெர்மன் என்ற அந்த காவலர் வேலையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதுபற்றி காவல் துறையின் செய்தி தொடர்பாளர் டான் ஆரன் கூறும்போது, இது ஏற்கத்தகாத, அதிர்ச்சி அளிக்க கூடிய மற்றும் அவமதிக்கும் செயல். அனைத்து துறையினருக்கும் இது பொருந்தும் என்று கூறினார்.

எனினும், 3 தரப்பினரும் சேர்ந்து திட்டமிட்டு வீடியோவை எடுத்துள்ளனர் என காவல் துறையின் மற்றொரு செய்தி தொடர்பாளர் கூறுகிறார். அப்போது ஹெர்மன் வேலையில் இருந்தாரா? என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.