மதுரை தொடர்ந்து 2 ஆம் நாளாக வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இணைப்புச் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையில் பெய்த தொடர் மழை காரணமாக வைகை ஆற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. மழை நீரும் ஆற்றுக்கு வருவதால், வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. நேற்று கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நேற்று வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வைகை ஆற்றில் இறங்கவோ, […]
