பாலஸ்தீனத்தில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு முகாம்கள் நிறைந்த ராஃபா (Rafah) பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட அடுத்த இரண்டு நாளில், அதே ராஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், 23 பெண்கள் உட்பட குழந்தைகள், முதியவர்கள், ஆண்கள் என சுமார் 45 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழும் காட்சிகள், உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன.
ALL EYES ON RAFAH
ALL EYES ON RAFAH
ALL EYES ON RAFAH
ALL EYES ON RAFAH
ALL EYES ON RAFAH
ALL EYES ON RAFAH
ALL EYES ON RAFAH
ALL EYES ON RAFAH
ALL EYES ON RAFAH
ALL EYES ON RAFAH
ALL EYES ON RAFAH
ALL EYES ON RAFAHIMMEDIATE PERMANENT CEASEFIRE NOW!!! pic.twitter.com/yHvFU9yJde
— Яizal do (@afrkml) May 30, 2024
அதைத் தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், சினிமா பிரபலங்கள் என மில்லியன் கணக்கான இணையதளவாசிகள் `All Eyes On Rafah’ என தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வந்தனர். பல நாடுகளும் இஸ்ரேலைக் கண்டித்து வருகின்றன. துருக்கி அதிபர் எர்டோகன், `இஸ்ரேல் சர்வதேச சட்டங்களைப் பின்பற்றாத வரையிலும், அதற்குக் கட்டுப்படாத வரையிலும் எந்தவொரு நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது’ என்று கூறியிருந்தார்.
இவ்வாறு உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு தரப்பினர் இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் குரல்கொடுத்துவர, `2023 அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதலில் நடத்தியது யார்… சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறதே அதற்கு யார் காரணம்… 250-க்கும் மேற்பட்டோரை பணயக்கைதிகளாக ஹமாஸ் குழுவினர் பிடித்துச் சென்றனரே அவர்கள் ஏன் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை…

அவர்களில் எத்தனை பேர் உயிரோடிருக்கிறார்கள், எத்தனைப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகினர்’ என்று இஸ்ரேலின் 8 மாத தொடர் தாக்குதலில் பலியான 36,000 பாலஸ்தீனிய மக்களுக்கு எதிர்பக்கம் நின்று சிலர் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், All Eyes On Rafah என்று குரல்கொடுத்துவரும் மில்லியன் கணக்கானவர்களுக்கு எதிராக அக்டோபர் 7-ம் தேதி உங்கள் கண்கள் எங்கிருந்தது என இஸ்ரேல் கேள்வியெழுப்பியிருக்கிறது.
We will NEVER stop talking about October 7th.
We will NEVER stop fighting for the hostages. pic.twitter.com/XoFqAf1IjM
— Israel ישראל (@Israel) May 29, 2024
இது தொடர்பாக, இஸ்ரேல் அரசு தனது அதிகாரபூர்வ X சமூக வலைதளப் பக்கத்தில், `மணற்பரப்பில் பற்றியெரிந்துகொண்டிருக்கும் இஸ்ரேலிய கொடிக்கு அருகில், ரத்தக்கரையின்மேல் அமர்ந்திருக்கும் குழந்தையின் முன், ஒருவர் துப்பாக்கி ஏந்தியபடி நிற்க, அக்டோபர் 7-ம் தேதி உங்கள் கண்கள் எங்கிருந்தது?’ என்று வாசகம் பதிந்த படத்தைப் பதிவிட்டு, `அக்டோபர் 7-ம் தேதி பற்றி பேசுவதை நாங்கள் நிறுத்த மாட்டோம். பணயக்கைதிகளுக்காக போராடுவதை நாங்கள் நிறுத்த மாட்டோம்’ என்று ட்வீட் செய்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb