அஸ்ஸாம் மாநில உள்துறை செயலாளர் ஷிலாதித்யா சேத்தியா, மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பெற்றுவந்த தன் மனைவி உயிரிழந்ததால், அவர் உயிரிழந்த அறையிலேயே தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 2009 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான ஷிலாதித்யா, தன் மனைவி புற்றுநோய் பாதிப்பின் நான்காம் நிலையில் சிகிச்சை பெற்றுவந்ததன் காரணமாக நான்கு மாதங்களாக விடுப்பில் அவரை கவனித்து வந்தார்.

இந்த நிலையில், அவரின் மனைவி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததையடுத்து ஷிலாதித்யா, தன் மனைவியுடன் சிறிது நேரம் தனியாக இருப்பதாகக் கூறி அவர் உயிரிழந்த அறையிலேயே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து பேசிய மருத்துவமனையின் இயக்குநர் ஹிதேஷ் பருவா, “ஷிலாதித்யாவின் மனைவி இங்கு புற்றுநோய் சிகிச்சை பெற்றுவந்தார். அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவருவதாக ஷிலாதித்யாவிடம் நாங்கள் கூறிவந்த நிலையில், 18 ஜூன் மாலை அவர் உயிரிழந்துவிட்டார். இதனையறிந்த ஷிலாதித்யா, பிரார்த்தனை செய்வதற்காக எனது மனைவியின் உடலுடன் சில கணங்கள் தன்னை தனியாக விட்டுவிடுமாறு மருத்துவரிடமும், செவிலியர்களிடமும் கூறினார்.

பின்னர், சிறிது நேரத்தில் உள்ளிருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டது. நாங்கள் அவரின் உயிரைக் காப்பாற்ற முயன்றோம். ஆனால், துப்பாக்கிச்சூட்டில் அவர் பலமாக காயமடைந்ததால் காப்பாற்ற முடியவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து அஸ்ஸாம் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஜி.பி.சிங் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வாக, மாநில உள்துறை செயலாளர் ஷிலாதித்யா சேத்தியா, புற்றுநோயுடன் போராடிவந்த தனது மனைவி இறந்த சில நிமிடங்களில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம், ஒட்டுமொத்த அஸ்ஸாம் காவல்துறையையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது” என்று ட்வீட் செய்திருக்கிறார்.
In an unfortunate turn of events, Sri Shiladitya Chetia IPS 2009 RR, Secretary Home & Political Government of Assam, took his own life this evening, a few minutes after the attending physician declared the death of his wife who was battling cancer for a long time. Entire Assam… pic.twitter.com/s2yQpVuUpl
— GP Singh (@gpsinghips) June 18, 2024
அதோடு, தனியார் ஊடகத்திடம் பேசிய போலீஸ் அதிகாரியொருவர், “கடந்த சில நாள்களாக தன் மனைவியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஷிலாதித்யா சேத்தியா மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையிலேயே தங்கி தன் மனைவியைக் கவனித்துக் கொண்டிருந்தார்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88