சப்த ரிஷிகளுக்கும் ஈசன் ஆதிகுருவாக எழுந்தருளி ஞானம் உபதேசித்த நாளே குருபௌர்ணமி தினம் எனக் கொண்டாடப்படுகிறது. வரும் 21 ஜூலை ஞாயிற்றுக்கிழமை நாளில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஸ்ரீஅன்பில்பிரியாள் அம்மை சமேத ஸ்ரீஅண்டவாணர் பெருமான் கோயிலில் காலை 10 மணி முதல் ஸ்ரீருத்ர ஹோமம் நடைபெற உள்ளது.

சகல பிரச்னைகளையும் தீர்த்து வைக்கும் இந்த சிறப்பான வழிபாட்டில் நீங்களும் கலந்து கொண்டால் நிச்சயம் நன்மைகள் விளையும் என்பது நம்பிக்கை. ஆன்மீக அன்பர்களுக்கு குரு பௌர்ணமி நாள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. குருவின் அருளைப் பெறுவதற்கு இந்நாள் முக்கியத்துவம் வாய்ந்தது. குருவின் துணையிருக்க திருவருள் கூடி வரும். சகல வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது ஐதிகம்.
ஸ்ரீருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பித்தால் யார் யார் எந்தப்பயனை விரும்பினாலும் நினைத்த காரியங்கள் ஈடேறும். ஸ்ரீருத்ர வழிபாட்டால் எல்லா தேவதைகளும் திருப்தி அடைவர் என்று சூத சம்ஹிதை கூறுகிறது. ஸ்ரீருத்ர வழிபாடே அனைத்து பாவங்களுக்குச் சிறந்த பிராயசித்தமாகவும் விளங்குகிறது. ஆயுளை நீட்டித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நீங்காதப் புகழோடு இந்திரனுக்குச் சமமான செல்வ வளத்தோடு வாழ்க்கையை அருளும் ஆற்றல் ஸ்ரீருத்ர ஹோமத்துக்கு உண்டு என்கின்றன ஆன்மிக நூல்கள்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
மேலும் தீர்க்க முடியாத நோய்களைத் தீர்க்கவும், கர்மவினைகள் தீர்ந்து உயர் நிலை அடையவும், மங்கல வாழ்வு நிலைக்கவும், முன்னேற்றம் காண்பதற்கும் இந்த ருத்ர ஹோமம் உதவும் என்கின்றன புனித நூல்கள். திருமணத் தடைகள், குடும்பச் சிக்கல்கள், வியாபார மற்றும் தொழில் தேக்கங்கள், அடிக்கடி உண்டாகும் மன – உடல் பிரச்னைகள் யாவையும் நீங்க இந்த ஸ்ரீருத்ர ஹோமம் உதவும்.

அபூர்வமாக நிகழும் இந்த ஸ்ரீருத்ர ஹோமத்தில் உங்கள் குடும்பத்துக்காக நீங்கள் வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைகள் யாவும் உறுதியாக ஒரு மண்டல காலத்துக்குள் நிறைவேறும் என்கிறார்கள் பெரியோர்கள். ஆண்டில் ஒரு முறையேனும் ஸ்ரீருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டால் எல்லாம் வல்ல இறைவன் அருளை அளித்து அந்த வீட்டில் சுபீட்சமும் சௌக்கியமும் பெருகும் என்பது நம்பிக்கை.
ஈசனின் திருவடிவங்களில் முக்கியமான ஸ்ரீருத்ரனை ஆராதிக்கும் ஹோமம் ஸ்ரீருத்ர ஹோமம், இது அச்சம் மற்றும் கவலையைப் போக்கி, சகலரின் பாதுகாப்பை அளிக்க வல்லது. ஈசனின் அருளால், இக பர இன்பங்களை அள்ளித் தரக் கூடியது இந்த ஹோமம். நவக்கிரகங்களை சாந்தப்படுத்தி, அதன் மூலம் வரும் தோஷங்களை நிவர்த்தி செய்து, ஜாதகருக்கு நன்மைகளை அதிகரிப்பதற்காகவும் இது செய்யப்படுகின்றது.

இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதால் பயம், கவலை போன்றவை நீங்கி, ஆயுள், ஆரோக்கியம், அபிவிருத்தி, ஐஸ்வர்யம் யாவும் பெருகும் என்பது உறுதி.
எனவே வாசகர்கள் நலமும் வளமும் பெற 2024 ஜூலை 21-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆடி மாத குருபௌர்ணமி நாளில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஸ்ரீஅன்பில்பிரியாள் அம்மை சமேத ஸ்ரீஅண்டவாணர் பெருமான் கோயிலில் காலை 10 மணி முதல் ஸ்ரீருத்ர ஹோமம் நடைபெற உள்ளது. எத்தனையோ ஹோமங்கள் செய்தாலும் அதற்க்கெல்லாம் மேலான சிறப்பு வாய்ந்தது ஸ்ரீருத்ர ஹோமம். 2024 ஜூலை 21-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆடி மாத குருபௌர்ணமி நாளில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் காலை 10 மணி முதல் ஸ்ரீருத்ர ஹோமம் நடைபெற உள்ளது.
சிவஸ்ரீ செந்தில்குமார் அவர்கள் கோவை ஆர்.எஸ். புரத்தில் வசிக்கும் சிவனடியார். சேக்கிழார்பெருமான் காட்டியருளிய வழியில் இவர் தனக்குச் சொந்தமான பூர்வீக இல்லத்தையே அண்டவாணர் அருட்துறை என்ற பெயரில் கோயிலாக அமைத்துள்ளார். இங்கருளும் அம்மையப்பருக்கு ஸ்ரீஅன்பில்பிரியாள் அம்மை சமேத ஸ்ரீ ஸ்ரீ அண்டவாணர் பெருமான் என்பது திருநாமம். இவர்களுடன் மிகப்பெரிய வடிவில் ஸ்ரீ சிவகாமி உடனாய ஞானக்கூத்தப் பெருமான், சோமாஸ்கந்தர், மற்றும் 63 நாயன்மார்கள் என முறையாக சிவாலய பரிவாரங்களைப் பிரதிஷ்டை செய்து நித்ய வழிபாடுகளை நிகழ்த்தி வருகிறார்.
சிறப்பான இந்த கோயிலில் எல்லா பலன்களையும் அளிக்கக் கூடிய இந்த ஸ்ரீருத்ர ஹோமம் குரு பௌர்ணமி நாளில் நடைபெற உள்ளது.

இந்த ஸ்ரீருத்ர ஹோமத்தினால் உங்களின் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கி, நன்மையான பலன்கள் உண்டாகும். மேலும் உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ எதிர்பாரா விபத்துக்கள் ஏற்படுதல், மரண பயம் உண்டாதல், எதிரிகள் தொல்லை போன்றவற்றை நீங்குகிறது. பஞ்சாட்சர மந்திர பாராயணமும், பதிகம் ஓதுதலும், ஸ்ரீருத்ர மந்திர ஜபமும், ஸ்ரீருத்ர ஹோமமும் எந்தவித கிரக தோஷங்களையும் நீக்கிவிடும் என்பதை அறிந்திருப்பீர்கள். பிரச்னை என்று ஒன்று வந்தால் அதற்கு தீர்வு என்றும் ஒன்று இருக்கும். எனவே தோஷங்களால் கவலை கொண்டோர், இந்த ஸ்ரீருத்ர ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள்.
இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள இந்த QR CODE பயன்படுத்திக் கொள்ளவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, விபூதி மற்றும் குங்குமம் அனுப்பி வைக்கப்படும்(தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07