பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோயில், நல்லூர், திருவண்ணாமலை மாவட்டம். முன்னொருகாலத்தில் தலயாத்திரை சென்ற அந்தணர்கள் சிலர் இத்தலத்தில் தங்கினர். தாங்கள் கொண்டு வந்திருந்த பெருமாள் சிலையை இங்கு வைத்துப் பூஜை செய்தனர். மறுநாள் அவர்கள் கிளம்பியபோது, அவ்விடத்தில் இருந்து சிலையை எடுக்க முடியவில்லை. அப்போது மகாவிஷ்ணு காட்சிகொடுத்து, தான் அத்தலத்தில் தங்க விரும்புவதாகக் கூறினார். அந்தணர்கள் மகிழ்ச்சியுடன், அங்கு கோயில் எழுப்பினர். அந்தக் கோயில் பாழடையவே, பிற்காலத்தில் புதிய கோயில் கட்டப்பட்டது. சுவாமி அழகாக இருப்பதால் “சுந்தர வரதராஜர்” என்று அழைக்கப்படுகிறார். […]
