சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. தன்னுடைய அப்பாவின் 50வது பிறந்தநாளுக்காக முன்னதாக கோயிலில் சென்று அர்ச்சனை செய்து வழிபட்ட மீனா மற்றும் செந்தில், கோயிலில் அவரை பார்க்கின்றனர். ஆனால் அவரோ அவர்களை அவமானப்படுத்துவதாக கடந்த எபிசோடில் காணப்பட்டது. இந்நிலையில் தற்போதைய பிரமோவில் அதையொட்டிய காட்சிகளே காணப்பட்டன.
