Poco 5G ஸ்மார்ட்போனை வெறும் ரூ.899 -இல் வாங்குவது எப்படி?

Flipkart Sale: ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்கு குறைவான விலையில் தரமான போனை வாங்க நல்ல வாய்ப்பு வந்துள்ளது. புதிய 5G போனை வாங்க திட்டமிட்டிருந்தால் அல்லது உங்கள் பழைய 4G போனை 5G ஸ்மார்ட்போனாக மேம்படுத்த நினைத்தால், இந்த செய்தி உங்களுக்கு உதவியாக இருக்கும். 

மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் 5G ஸ்மார்ட்போனை பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த மலிவான 5G போனில் கிடைக்கும் சலுகைகள் பற்றியும் இங்கே தெரிந்துகொள்ளலாம். 

பிளிப்கார்ட் விற்பனை

Flipkart -இல், Poco C75 5G ஸ்மார்ட்போன் மிகவும் மலிவான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தெ ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.10,999. ஆனால், இது பிளிப்கார்ட்டில் ரூ.7,999 -க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த போனை வெறும் ரூ.899 -க்கு வாங்கலாம். ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. நிபந்தனைகளை அறிந்து கொள்வதற்கு முன், போகோவின் இந்த மலிவான 5G ஸ்மார்ட்போனில் கிடைக்கும் சிறந்த அம்சங்களைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

Poco C75 5G: இதில் கிடைக்கும் சிறப்பு அம்சங்கள் என்ன?

Poco C75 5G ஸ்மார்ட்போனில் 4GB ரேம் உள்ளது. இதில் 64 ஜிபி உள் சேமிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் சேமிப்பிடத்தைப் பொறுத்தவரை, 2000 புகைப்படங்கள் வரை இதில் சேமிக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த Poco போனின் செயல்திறனை அதிகரிக்க Snapdragon 4s Gen 2 5G செயலி பயன்படுத்தப்பட்டுள்ளது.

50 மெகாபிக்சல் கேமரா மற்றும் இரண்டு நாள் பேட்டரி பேக்அப்

இந்த போனின் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகவும் நேர்த்தியாக இருக்கும். புகைப்பட தரத்தை மேம்படுத்த இந்த தொலைபேசியில் 50 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக முன்புறத்தில் 5 மெகாபிக்சல் ஒற்றை முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் 6.88 இன்ச் HD பிளஸ் திரை உள்ளது. 

இதை இயக்க, 5160 mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், அதன் பிறகு அதை இரண்டு நாட்களுக்கு சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நிறுவனம் கூறுகிறது.

Poco C75 5G: இந்த போனை வாங்குவதற்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன?

இந்த மலிவான போக்கோ 5G போன் பிளிப்கார்ட்டில் ரூ.7,999 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. எனினும், வாடிக்கையாளர்கள் பரிமாற்ற சலுகை, அதாவது எக்ஸ்சேஞ்ச் சலுகையை பயன்படுத்தினால், இதை வெறும் ரூ.899 -க்கு வாங்கலாம். எனினும், இந்த சலுகையை பயன்படுத்த, உங்கள் பழைய தொலைபேசியின் நிலை நன்றாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். 

வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போனை மாற்றினால், அதற்கு பதிலாக ரூ.7,100 தள்ளுபடி பெறலாம். இந்த வழியில், இந்த மலிவான போனை, வெறும் ரூ.899 -க்கு வாங்கலாம். இந்த போனில் ஜியோ 5ஜி சிம் மட்டுமே வேலை செய்யும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த போனில் மற்ற நிறுவனங்களின் சிம் கார்டுகளைப் பயன்படுத்தினால், 5ஜி நெட்வொர்க்கை அனுபவிக்க முடியாது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.