தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் எண்ணற்ற பாடல்களைப் பாடி இருக்கிறார் பாடகர் உன்னி கிருஷ்ணன்.
உன்னி கிருஷ்ணனுக்கு வாசுதேவ் கிருஷ்ணா என்ற ஒரு மகனும், மற்றும் உத்ரா என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் உன்னிகிருஷ்ணனின் மகனுக்கு நேற்று (பிப்ரவரி 1) திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. உத்ரா என்பவரை வாசுதேவ் கிருஷ்ணா திருமணம் செய்து இருக்கிறார். உன்னிகிருஷ்ணனின் மகள் பெயரும் உத்ரா, மருமகள் பெயரும் உத்ரா என்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

இவர்களது திருமண நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கின்றனர். அவர்களது திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணத்தில் எடுத்த புகைப்படத்தை வைரமுத்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “பாடகர் உன்னிகிருஷ்ணன் இல்ல திருமணம்.
பாடகர் உன்னி கிருஷ்ணன்
இல்லத் திருமணம்மணமக்கள்:
வாசுதேவ் கிருஷ்ணா
உத்ராநான் எழுதிய ஒருபாட்டுக்கு
தேசிய விருதை அவர்பெற்றார்அவர் பாடிய என்பாட்டுக்கு
தேசிய விருதை நான்பெற்றேன்உள்ளங்கவர்
பாடகர் குடும்பத்தை
உள்ளன்போடு வாழ்த்தினேன்மணமகன் பாட்டு:
“என்னவளே – அடி
என்னவளே… pic.twitter.com/qK0lwoky2y— வைரமுத்து (@Vairamuthu) February 1, 2025
நான் எழுதிய ஒரு பாட்டுக்கு உன்னிகிருஷ்ணன் தேசிய விருதைப் பெற்றார். அவர் பாடிய என் பாட்டுக்குத் தேசிய விருதை நான் பெற்றேன். உள்ளம் கவர் பாடகர் குடும்பத்தை உள்ளன்போடு வாழ்த்தினேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…