மோடிக்கும் – டிரம்பிற்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசிய ஜெய்சங்கர் இவ்வாறு கூறினார். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில நாட்களில் சந்தித்த முக்கிய உலகத் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர் என்றார். உலகின் மற்ற இந்த தலைவர்களுடனும் டிரம்பிற்கு நேர்மறையான வரலாறு இல்லை, ஆனால் பிரதமர் மோடியின் விஷயத்தில் அப்படியில்லை […]
