சென்னை: அமைச்சர்கள் உடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்படுவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி, அதை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வரும் நிலையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் கடிதம் எழுதியிருந்தனர். […]
