கூட்டாட்சி கொள்கைகளையும் மாநிலங்களின் அதிகாரத்தையும் பாதுகாக்கத் தயாராக இருப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மக்கள்தொகை அடிப்படையில் சட்டமன்ற மற்றும் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்வதை எதிர்த்து மார்ச் 22 அன்று நடைபெறும் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்ததைத் அடுத்து அவர் இவ்வாறு பதிலளித்தார். மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு கர்நாடக துணை முதல்வரும் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவருமான டி.கே. சிவகுமாரை அனுப்புவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். […]