ஹோலிகா தகனம்.. வண்ணங்களின் திருவிழா களைகட்டியது

வண்ணங்களின் திருவிழா என போற்றப்படும் ஹோலி பண்டிகை நாளை (14-3-2025) கொண்டாடப்படுகிறது. பக்த பிரகலாதனின் வரலாற்றோடு இணைந்த பண்டிகையின் முதல் நாள் நிகழ்வான ஹோலிகா தகனம் இன்று நடைபெறுகிறது.

அசுர குலத்தைச் சேர்ந்த இரண்யகசிபு, தனது மகன் பிரகலாதன் மகா விஷ்ணுவின் பக்தனாக இருந்ததால் அவனை கொல்ல சகோதரி ஹோலிகாவின் உதவியை நாட, அவள் பிரகலாதனை கொல்லும் முயற்சியில் மாண்டுபோனாள். அவள் நெருப்பில் எரிந்து சாம்பலானதை நினைவுகூர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாள் ஹோலிகா தகனம் என்ற நிகழ்வு நடத்தப்படுகிறது.

அதன்படி இன்று இரவு ஹோலிகா தகனம் உற்சாகமாக நடைபெறுகிறது. அத்துடன் பெரும்பாலான இடங்களில் இன்றே வண்ணங்களை பூசி ஹோலி கொண்டாட்டத்தையும் தொடங்கிவிட்டனர். நாளை வரை இந்த உற்சாக கொண்டாட்டம் நீடிக்கும்.

அமிர்தசரஸ் இஸ்கான் கோவிலில் நடைபெற்ற ஹோலி கொண்டாட்டம்

இமாச்சல பிரதேசத்தில் வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசி கொண்டாடும் மக்கள்

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களின் உற்சாகம்

சிம்லாவில் வண்ணங்களின் கலவையாக மாறிய மாணவிகள்

ரிஷிகேஷில் ஹோலி கொண்டாட்டத்தில் இணைந்த வெளிநாட்டு பெண்கள்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.