ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R ஒற்றை இருக்கை வேரியண்ட் விற்பனைக்கு வெளியானது | Automobile Tamilan

125சிசி சந்தையில் பிரபலமாக உள்ள ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் கூடுதலாக ஒற்றை இருக்கை வேரியண்ட் கொண்ட ஏபிஎஸ் மாடல் விற்பனைக்கு ரூ.1.06 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


முதன்முறையாக நாம் தான் எக்ஸ்ட்ரீம் 125ஆர் படத்தை வெளியிட்டிருந்தோம், தற்பொழுது ஒற்றை இருக்கை மாடலையும் வெளியிட்டுள்ளோம். தொடர்ந்து டிசைனில் எந்த மாற்றமும் இல்லாமல், புதிதாக எந்த நிறமும் சேர்க்கப்படாமல் ஃபயர்ஸ்ட்ரோம் ரெட், ஸ்டேலின் கருப்பு, கோபல்ட் ப்ளூ என மூன்று நிறங்களிலும் ஒற்றை இருக்கை கொடுத்திருப்பது மிகவும் வரவேற்க தக்க முக்கிய அம்சமாக பார்க்கப்படுகின்றது.

கூடுதலாக சீலைக்கான (Saree Gaurd) பாதுகாப்பினை வழங்குவதனை தற்பொழுது சற்று மாறுபட்ட ஸ்டைலிஷான வீல் கவர் வழங்கப்பட்டுள்ளது. ஒற்றை இருக்கை மாடலில் டயர் ஹக்கர் இழந்துள்ளது.

2025 hero xtreme 125r wheel cover


124.7cc ஏர்-கூல்டு 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 8,250 rpm-ல் 11.40 hp பவர் மற்றும் 6,500rpm-ல் 10.5 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தால் மைலேஜ் லிட்டருக்கு 66 கிமீ என சான்றிதழ் பெறப்பட்டுள்ள நிலையில் நிகழ்நேரத்தில் சுமார் 55-60 கிமீ வரை கிடைக்கின்றது.

எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொண்டு ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வாயிலாக ஸ்மார்ட்போனை இனைக்கும் பொழுது கால் அலர்ட் உட்பட எஸ்எம்எஸ் அலர்ட் என பல்வேறு தகவல்களுடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷனை பெற இயலும் வகையில் உள்ளது.

  • XTREME 125R IBS – ₹ 1,00,557
  • XTREME 125R ABS – ₹ 1,06,097
  • XTREME 125R Single Seat ABS – ₹ 1,06,097

(All Price Ex-Showroom Tamil Nadu)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.