Jos Buttler: "என் ஸ்கோரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" – சதத்தை தவறவிட்டது பற்றி பட்லர்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 97 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார் பட்லர்.

203 என்ற கடினமான டார்கெட்டை சேஸ் செய்கையில், ஓபனிங் பேட்ஸ்மேனாக இறங்கிய கேப்டன் சும்பன் கில்லின் விக்கெட்டை இரண்டாவது ஓவரிலேயே இழந்து தடுமாறியது குஜராத் அணி.

அதிரடி ஆட்டம்

இங்கிலாந்து வீரரான ஜோஸ் பட்லர் மூன்றாவது இடத்தில் இறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றியை உறுதி செய்துள்ளார்.

11 பவுண்டரிகள், 4 சிக்ஸர் விளாசி 54 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார் பட்லர்.

அதிரடி ஆட்டத்துக்காக ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற பட்லர், “பேட்டிங் செய்வதற்கு இது அருமையான பிட்சாக இருந்தது. ஒவ்வொரு பந்தையும் முயன்று ஆழமாக எடுத்துச் செல்ல விரும்பினேன், நாங்கள் தாக்குவதற்கு சரியான தருணங்களைத் தேர்ந்தெடுத்தேன். போட்டியின் வழியில் நல்ல பார்ட்னர்ஷிப்களை உருவாக்கினோம்.

எவ்வளவு வியர்வை… எவ்வளவு சோர்வு

இங்கு காலநிலை மிகவும் சூடாக இருக்கிறது. எவ்வளவு திரவம் (ட்ரிங்க்) அருந்த வேண்டியிருக்கிறது, எவ்வளவு வியற்வை வெளியேருகிறது என்பதைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. மிகவும் இருக்கமாக, சோர்வாக இருந்தது.

Jos Buttler
Jos Buttler

விளையாட்டின் ஒருபகுதியாக அது இருந்தது. நீங்கள் நல்ல உடல்தகுதியுடன் இருக்க வேண்டும். போட்டியின் அழுத்தத்தையும் மைதானத்தின் வெப்பத்தையும் தாங்க வேண்டும்.” என்று பேசியுள்ளார்.

Jos Buttler தவற விட்ட சதம்

இணையத்தில் வைரலாகிவரும் அவர் பாய்ந்து பிடித்த கேட்ச் பற்றி, “நான் முதல் ஆறு ஆட்டங்களில் சுமாராக விளையாடியிருக்கிறேன். இன்று சிறப்பாக விளையாட முயற்சிக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தேன். இப்படி ஒரு கேட்சைப் பிடிப்பது நன்றாக உணரவைக்கும்.

இன்று ரூதர்ஃபோர்டுடன் இணைந்து பேட்டிங் செய்ததை விரும்பினேன். அவர் திடீரென சிக்ஸர்களை அடிக்கிறார். மோஹித்துக்கு எதிரான அவரது சிக்ஸர்தான் போட்டியையும் மொமண்டம்மையும் எங்கள் பக்கம் திருப்பியது.” என்றார்.

சதத்தை தவறவிட்டது குறித்து, “நான் ராகுலிடம் (ராகுல் தெவாட்டியா) என் ஸ்கோரைப் பற்றி கவலைப்பட வேண்டாம், நாம் வெற்றிபெற வேண்டும் என்று கூறினேன்” எனத் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.