உலகிலேயே அதீத கசப்புச் சுவை கொண்ட பொருளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜெர்மனியில் உள்ள மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உணவு ஆராய்ச்சியாளர்கள், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் பரவலாக காண்டப்படும் காளான்தான் உலகிலேயே அதிக கசப்பு சுவை உள்ளது என்றும் அதற்கு காரணமாக வேதிப் பொருளையும் கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக கசப்பு சுவை உள்ள காளான்கள் உண்ணத்தகுந்தவை அல்ல என்ற கருத்து பரவலாக நம்பப்படும், ஆனால் இந்த காளான் உண்பதற்கு பாதுகாப்பானது என்றும் கூறியுள்ளனர்.

இந்த காளானின் பெயர் அமரோபோஸ்டியா ஸ்டிப்டிகா (Amaropostia stiptica) இதனை ‘கசப்பு ப்ராக்கெட் பூஞ்சை’ என்றும் அழைக்கின்றனர்.
கசப்பு சுவைக்கு காரணமான வேதிப்பொருள்!
ஆய்வாளர்கள் இந்த காளானில் இருந்து 3 சேர்மங்களை பிரித்தெடுத்து அவை மனித சுவை ஏற்பிகளில் எப்படி வினைபுரிகின்றன என்பதை ஆராய்ந்தனர்.
இதில் உள்ள oligoporin D என்ற வேதிப் பொருளை ஒரு நபர், ஒரு கிராம் அளவில் உட்கொண்டால் அவர் அதன் கசப்பு சுவையைக் கரைக்க 16,000 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டியிருக்கும் என்கின்றனர்.
இந்த வேதிப்பொருளை உணவுப்பொருட்களில் விஷமிருப்பதைக் கண்டறிய பயன்படுத்த முடியும் என்கின்றனர்.
Mushroom study identifies most bitter substance known to date https://t.co/asuo3Xz8cX pic.twitter.com/9VkfGzn2yL
— Chemistry News (@ChemistryNews) April 7, 2025
இந்த கண்டிபிடிப்பால் என்ன பயன்?
இந்த காளானின் கண்டுபிடிப்பு, மனித பரிணாமத்தில் எப்படி கசப்பு சுவையை கண்டறியும் உணரிகள் தோன்றின, அதன் தேவை என்ன? என்பதைக் கண்டறியும் ஆய்வுக்கு உதவலாம் என்கின்றனர்.
மேலும் வருங்காலத்தில் உணவு தொழில்நுட்ப ஆய்விலும் இது உதவக் கூடும் என்கின்றனர். உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் தாவரவங்களின் கசப்பு சுவையை பற்றி ஆராய்ந்திருந்தாலும் காளான் போன்ற பூஞ்சை வகைகளில் கவனம் செலுத்தியவர்கள் மிகவும் குறைவு.
கசப்பு சுவைக்கான உணர்மிகள் வாயில் மட்டுமல்லாமல் வயிறு, குடல், இதயம் மற்றும் நுரையீரலிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் கசப்பு சுவை மனித உடல் மீது கொண்டிருக்கும் உறவை ஆராய்வது அவசியம் என்கின்றனர். இதற்கு இந்த காளானின் கண்டுபிடிப்பு உதவக்கூடும்.
மரங்களில் வளரும் இந்த கசப்பு காளானை சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தால் ட்ரை பண்ணுவீங்களா?