சென்னை: தமிழ்நாட்டில், நடப்பாண்டில் 34,250 பேரை தொழில்முனைவோராக்க தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்துள்ளதாக தெரிவிர்ததுள்ள அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாட்டில், ரூ.643.18 கோடியில் 22 புதிய தொழிற்பேட்டைகள், ரூ.120.79 கோடியில் கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதி செய்யும் குறுங்குழும திட்டங்களை நடப்பாண்டிற்குள் முடிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். சென்னை கிண்டியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அறிவிப்புகள் குறித்து, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. […]
