பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை: சீனா திட்டவட்ட மறுப்பு

பீஜிங்,

பாகிஸ்தான் ராணுவத்துக்கு தேவையான பெரும்பான்மையான ஆயுதங்கள் சீனாவில் இருந்தே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் சீனாவும், பாகிஸ்தானும் மிக நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் 81 சதவீத ஆயுதங்களை சீனாவிடம் இருந்தே கொள்முதல் செய்யதுள்ளது என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் விமானப்படையில் உள்ள ஜே-17 போர் விமானங்களை இரு நாடுகளும் கூட்டாக உற்பத்தி செய்கின்றனசமீபத்தில் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்திய ஜெட் போர் விமானங்கள், ரேடார்கள் ஆகியவை சீன தயாரிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆயுதங்கள் மற்றும் ராணுவத்துக்கு தேவையான பொருட்களுடன் சரக்கு விமானம் ஒன்றை பாகிஸ்தானுக்கு சீனா அனுப்பியதாக இணைய தளங்களில் நேற்று தகவல்கள் பரவின. தற்போதைய சூழ்நிலையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.இந்த தகவலை சீனா உடனடியாக மறுத்துள்ளது. இது தொடர்பாக சீன மக்கள் விடுதலை ராணுவ விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-பாகிஸ்தானுக்கு ஒய்-20 என்ற சரக்கு விமானம் மூலம் ஆயுதங்கள் அனுப்பப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் முற்றிலும் தவறானது. அது வதந்தியாகும். அதை யாரும் நம்ப வேண்டாம்.

ராணுவம் தொடர்பான வதந்திகளை உருவாக்கி பரப்புபவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆசியாவில் அமைதியை சீனா விரும்புகிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் சீனா ஆக்கபூர்வமாக பங்காற்றியுள்ளது. அதே நேரம் பெஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே நடந்த சண்டையில், இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது என்ற பொய்யான தகவலை சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகங்களில் பரப்பப்பட்டன. இதை சீனாவில் உள்ள இந்திய தூதரகம் கடுமையாக கண்டித்ததுடன், இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதற்கு முன் அதனை சரிபார்க்க வேண்டும் என்று சீனாவின் டேப்ளாய்டு குளோபல் டைம்ஸை எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.