இந்த வீரருக்கு இந்திய அணியில் இடமில்லை? யார் அந்த வீரர்? என்ன காரணம்?

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இத்தொடரில் இந்திய அணியில் மாற்று வீரராக மட்டுமே இடம்பெறுவார். அவருக்கு பிளேயிங் 11 இடம் கிடைக்காது என தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இந்திய டெஸ்ட் அணியில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமானார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 42 சராசரியுடன் 4 அரை சதங்கள் உட்பட 468 ரன்கள் அடித்துள்ளார். பந்து வீச்சில் 25 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். 

அவர் நல்ல ஆல்ரவுண்டராக திகழ்ந்தாலும், அவருக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முக்கியத்துவம் கிடைக்காது என தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால், இங்கிலாந்தில் உள்ள மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது. எனவே அங்கு பெரிய அளவில் சுழற்பந்துவீச்சு கைக்கொடுக்காது. இதன் காரணமாக இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை மட்டுமே இந்திய அணி பிளேயிங் 11ல் வைக்க திட்டமிடும். 

அந்த தேர்வில் ரவீந்திர ஜடேஜாவும், முழு நேர பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகிய இரண்டு போரும் இடம் பெறுவார்கள் என கூறப்படுகிறது.எனவே இவர்களை தாண்டி வாஷிங்டன் சுந்தர் இடம் பெற வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. மேலும், வேகப்பந்து வீச்சுக்கு மைதானங்கள் கைகொடுப்பதால், ஷர்துல் தாக்கூர் மற்றும் நிதீஷ் ரெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிங்க: ஆர்சிபிக்கு குட் நியூஸ்.. அணிக்கு திரும்பிய முக்கிய வீரர்!

மேலும் படிங்க: கடைசி வரை விராட் கோலியால் இந்த ஒரு சாதனையை பூர்த்தி செய்ய முடியவில்லை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.