What to watch on Theatre: மாமன், DD Next Level, F. Destination, M.Impossible, Lovely-இந்த வார ரிலீஸ்

Devil’s Double Next Level

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில்

DD Next level Review: படத்துக்குள் மாட்டிக் கொள்ளும் ரிவியூவர்! திரைக்கதை நெக்ஸ்ட் லெவலா ஏமாற்றமா?

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கீதிகா திவாரி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், கெளதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Devil’s Double Next Level’. ஆர்யா இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். ஹாரர், திகில் காமெடி திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

மாமன் (தமிழ்)

மாமன் விமர்சனம்
மாமன் விமர்சனம்

மாமன் விமர்சனம்: உறவுச் சிக்கலைப் பேசும் மெலோடிராமா; ஆனால் வலிந்து திணிக்கப்பட்ட அந்த எமோஷன்கள்?!

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்த ‘மாமன்’ திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. தாய்மாமன் உறவு, குடும்பத்தின் உறவுச் சிக்கலைப் பேசும் மெலோடிராமாதான் இதன் கதைக்களம். ஐஸ்வர்யா லெட்சுமி, பாபா பாஸ்கர், ராஜ் கிரண், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம்  உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

Lovely (மலையாளம்)

Lovely

திலேஷ் கருணாகரன் இயக்கத்தில் மேத்யூ தாமஸ், உன்னிமயா பிரசாத், மனோஜ் கே ஜெயன், பிரசாந்த் முரளி, பாபு ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Lovely’. குடும்பம், நண்பர்கள் என ஜாலியாக இருந்த மேத்யூ தாமஸ், திடீரென சிறைக்குச் செல்ல நேரிடுகிறது. தனிமை சிறையில் இருக்கும் அவருக்கு ஒரு ஈ நட்பாகக் கிடைக்கிறது. அதன்பிறகு மேத்யூதாமஸ் வாழ்வில் நடந்த மேஜிக்தான் இதன் கதைக்களம். ஜாலியான பேண்டஸி திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Mission: Impossible – The Final Reckoning (ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி)

Mission: Impossible – The Final Reckoning

கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கத்தில் ஸ்டண்ட்டுகளுக்குப் பெயர்போன ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிப்பில் அட்வன்சர், ஆக்‌ஷன், திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ‘Mission Impossible Dead Reckoning – Part One’.

முடியாத விஷயங்களை முடித்துக்காட்டி, பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு உலகைப் பாதுகாப்பதுதான் ‘Mission Impossible’ படங்களின் அடிப்படையான கதைக்கரு. கட்டுங்கடங்காத செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்த இவ்வுலகில் இரண்டே சாவிகள்தான் (Key) இருக்கின்றன. அதை அதிரடி சாகசங்களுடன் கண்டுபிடிப்பதாக இதன் முதல் பாகம் இருந்தது. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டிருந்த நிலையில் முதல் பாகத்தைத் தொடர்ந்து இப்போது இரண்டாம் பாகமாக இப்படம் இந்த வாரம் வெளியாகியிருக்கிறது.

Final Destination Bloodlines (ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி)

Final Destination Bloodlines

மரணத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்ற கருத்தை மையமாகக் கொண்டு, கடந்த 25 ஆண்டுகளாக 5 பாகங்களாக வெளியாகிவந்த ‘Final Destination’ திரைப்படம் இப்போது 6 வது பாகமாக ‘Final Destination Bloodlines’ என திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. முந்தைய பாகங்களில் மரணம் அந்நியர்களைத் துரத்தியது, ஆனால் இந்தப் படம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.