‘விடாத மழை!’
பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி மழை காரணமாக ரத்தாகியிருக்கிறது. இதனால் இரு அணிகளுக்கு தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டி ரத்தானதால் ப்ளே ஆஃப் ரேஸில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது?

‘வெளியேறிய கொல்கத்தா!’
இந்தப் போட்டி ரத்தாகியிருப்பதால் கொல்கத்தாவுக்குதான் பெரிய பின்னடைவு. ஏனெனில், கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் செல்ல இந்தப் போட்டியில் வென்றே ஆக வேண்டியது கட்டாயம் என்ற நிலை இருந்தது. இப்போது போட்டி ரத்தாகியிருப்பதால், 13 போட்டிகளில் ஆடி 12 புள்ளிகளை மட்டுமே கொல்கத்தா பெற்றிருக்கிறது.
எஞ்சியிருக்கும் போட்டியை கொல்கத்தா வென்றாலும் 14 புள்ளிகளை மட்டுமே பெறும். 14 புள்ளிகளை வைத்துக் கொண்டு ஒரு அணி ப்ளே ஆப்ஸூக்குள் நுழையும் நிலை இப்போது இல்லை. அதனால் கொல்கத்தா அணி ப்ளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்து தொடரை இழந்திருக்கிறது.

‘பெங்களூருவின் நிலை!’
பெங்களூரு அணி இந்தப் போட்டியை வென்றிருந்தால் முதல் அணியாக ப்ளே ஆப்ஸூக்கு சென்றிருக்கும். ஆனால், இந்தப் போட்டி ரத்தாகி ஒரு புள்ளி மட்டுமே கிடைத்ததால் பெங்களூரு அணி இன்னும் காத்திருக்க வேண்டிய சூழலே ஏற்பட்டுள்ளது. பெங்களூரு அணி இப்போது 12 போட்டிகளில் ஆடி 17 புள்ளிகளில் இருக்கிறது.

நாளை ராஜஸ்தானுக்கும் பஞ்சாபுக்கும் இடையேயான போட்டியும் குஜராத்துக்கும் டெல்லிக்கும் இடையேயான போட்டியும் நடக்கவிருக்கிறது. இதில், டெல்லி அணியோ பஞ்சாப் அணி அல்லது இரண்டு அணிகளுமே தோற்றால் நாளையே பெங்களூரு அணி ப்ளே ஆப்ஸூக்கு சென்றுவிடும். இல்லையேல், பெங்களூரு அணி இன்னும் காத்திருக்க வேண்டும்.