Real Estate: வட்டி விகிதத்தைக் குறைத்த ரிசர்வ் வங்கி; கடன் வாங்கி வீடு வாங்க இது ஏற்ற சமயமா?

தங்கத்திற்கு அடுத்த இந்திய மக்களுக்கு மிகப்பெரிய ஆசை ‘வீடு’. ‘சாகறதுக்குள்ள சொந்த வீடு வாங்கிறணும்’ என்கிற வாக்கியத்தை நமது வீடுகளில் அவ்வப்போது கேட்டிருப்போம். அந்தளவுக்கு நம் அனைவருக்கும் சொந்த வீடு முக்கியம்.

அவ்வளவு முக்கியமான வீட்டைப் பெரும்பாலானவர்களால் கடன் இல்லாமல் வாங்க முடிவதில்லை. பலரும் வங்கிக் கடன் போட்டுத்தான் வீடு வாங்குகிறார்கள்.

ஆக, இப்போது கடன் வாங்கி வீடு வாங்கலாமா?

தற்போது, கடன் வாங்கி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய ஏற்ற சமயம் என்று கூறலாம். காரணம், இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைத்துள்ளது. இனியும் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால், தற்போது பிற கடன்களை விட, வீட்டுக் கடனுக்கான வட்டி குறைந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி செய்துள்ள ரெப்போ வட்டி விகிதக் குறைப்பால், இதுவரை 9 சதவிகிதத்தில் இருந்த வீட்டுக் கடன் வட்டி, தற்போது 8.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

வீட்டுக் கடன்
வீட்டுக் கடன்

இது யாருக்கு லாபம்?

இந்த வட்டி விகித குறைப்பு மூலம் மாறுபடும் வட்டி விகிதத்தில் (Floating Rate Interest) கடன் வாங்கியிருப்பவர்கள் பலனடைய முடியும்.

நிலையான வட்டி விகிதத்தில் கடன் வாங்கியிருப்பவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு பயன் கொடுக்காது.

ஆனால், இனி புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு இந்த 0.5 சதவிகித வட்டிக் குறைப்பு கைகொடுக்கும்.

இரண்டாம் வீடு வாங்கலாமா?

இந்த வட்டி குறைப்பைப் பயன்படுத்தி இரண்டாவது வீடு வாங்கலாமா என்கிற கேள்வி எழலாம். ஆனால், வசிக்கும் வீட்டைத் தாண்டி, அதுவும் கடன் வாங்கி வாடகைக்கு விட இன்னொரு வீடு வாங்குவது என்பது நமக்கு அதிக லாபத்தைத் தராது.

நாம் வாங்கியிருக்கும் வீட்டின் மதிப்பில் 2.5 – 3 சதவிகிதம்தான் ஒரு ஆண்டுக்கு வீட்டு வாடகை வருமானம் கிடைக்கும். நமது வீட்டின் மதிப்பு ஆண்டுக்கு 4 – 5 சதவிகிதம் அதிகரித்தாலும், மொத்தமாக, ஆண்டுக்கு 6.5 – 8 சதவிகிதம் தான் நமக்கு லாபம் கிடைக்கும்.

ஆனால், ஆண்டுக்கு விலைவாசியின் உயர்வோ 6 – 7 சதவிகிதம். அதனால், கடன் வாங்கி இரண்டாவதாக வீடு வாங்குவது நல்லதல்ல.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.