ஜியோ பயனர்களுக்கு குட் நியூஸ்.. வெறும் 1 ரூபாய் இருந்தால் போதும், இந்த சிறப்பு சலுகை பெறலாம்

Amazon Prime Jio Recharge Plan: ஜியோ தனது பயனர்களுக்காக பல புதிய திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஜியோ இரண்டு சிறந்த திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது, இதில் ஜியோ பயனர்கள் OTT சந்தாவுடன் டேட்டாவை சலுகையையும் பெறுவார்கள். இதனுடன், நீங்கள் அன்லிமிடெட் அழைப்பையும் பெறுவீர்கள். இந்தத் திட்டங்களின் விலை எவ்வளவு, இந்தத் திட்டங்களால் உங்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்போது விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.

ஜியோவின் ரூ.1028 ரீசார்ஜ் திட்டம்
ஜியோவின் ரூ.1028 திட்டத்தைப் பற்றிப் பேசுகையில், ஜியோ பயனர்கள் மொத்தம் 168 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இது தவிர, இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி காலம் 84 நாட்கள் ஆகும். நிறுவனம் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்போடு தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. கூடுதல் நன்மைகளைப் பற்றிப் பேசுகையில், பயனர்கள் 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தா, ஸ்விக்கி ஒன் லைட் மற்றும் இந்தத் திட்டத்துடன் ரூ.50 கேஷ்பேக் ஆகியவற்றைப் பெறுகிறார்கள். ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்படுகிறது.

ஜியோவின் ரூ.1029 ரீசார்ஜ் திட்டம்
ஜியோவின் ரூ.1029 ரீசார்ஜ் பற்றிப் பேசுகையில், இந்தத் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் பயனர்கள் வரம்பற்ற அழைப்பு, தினமும் 100 SMS மற்றும் 2GB டேட்டாவின் பலனைப் பெறுவார்கள். இது தவிர, இந்த திட்டத்தைக் கொண்ட பயனர்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் அமேசான் பிரைம் சந்தாவை 90 நாட்களுக்கு வழங்கப்படும்.

ஜியோவின் அமேசான் பிரைம் சந்தா திட்டம்:
இந்த இரண்டு திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், நீங்கள் Ott தளத்தில் அதிக திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களைப் பார்க்க விரும்பினால், ரூ.1029 திட்டம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இந்த திட்டத்தில், கூடுதலாக ரூ.1 செலுத்துவதன் மூலம், நீங்கள் அமேசான் பிரைம் சந்தாவைப் பெறுவீர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.