இந்த வேலையும் போச்சா: அடுத்த டார்கெட் இவங்கதான், டெலிவரி பாய் ஆகும் AI

Amazon Latest News: அமேசான் தற்போது மற்றொரு தொழில்நுட்ப புரட்சிக்கு தயாராகி வருகிறது. அந்த நிறுவனம் விரைவில் Humanoid Robots எனப்படும் மனித உருவ ரோபோக்களை (அதாவது மனிதர்களைப் போல தோற்றமளிக்கும் மற்றும் வேலை செய்யும் ரோபோக்கள்) சோதிக்கத் தொடங்க உள்ளது. இது எதிர்காலத்தில் பார்சல் டெலிவரிக்கு உதவ சோதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு அலுவலகத்தில் கட்டப்பட்ட ஒரு சிறப்பு உட்புற “மனித உருவ பூங்காவில்” இந்த சோதனை செய்யப்படும். உண்மையான டெலிவரி சூழ்நிலைகளில் ரோபோக்கள் நகரும் திறனை சோதிக்கக்கூடிய வகையில் இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.

Amazon Humanoid Robots: 

இதுவரை அமேசான் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் இந்த நடவடிக்கை AI (செயற்கை நுண்ணறிவு) அடிப்படையிலான வேகமான மற்றும் ஸ்மார்ட் டெலிவரி அமைப்பை உருவாக்கும் நிறுவனத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக உள்ளது. அமேசான் கிடங்குகளில் AI ஆல் இயங்கும் ரோபோக்கள் மற்றும் தானியங்கி டெலிவரி அமைப்புகளில் அமேசான் ஏற்கனவே பணியாற்றி வருகிறது.

டெலிவரியில் வேகம் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு

2005 இல் அமேசான் பிரைம் சேவையைத் தொடங்கியபோது, ​​டெலிவரி இரண்டு நாட்களில் செய்யப்பட்டது. பின்னர் 2019 இல் ஒரு நாள் டெலிவரி வந்தது. இப்போது நிறுவனத்தின் இலக்கு ஒரே நாள் டெலிவரியை பொதுவானதாக மாற்றுவதாகும். 2024 ஆம் ஆண்டில், அமேசான் துணைத் தலைவர் ஸ்டீவ் அர்மாடோ, அமெரிக்காவின் 60 முக்கிய நகரங்களில் 60% பிரைம் ஆர்டர்கள் ஒரே நாளில் அல்லது அடுத்த நாளில் டெலிவரி செய்யப்படுகின்றன என்று கூறினார். இதற்கான புகழை AI -க்கு கொடுத்த அவர், AI தொழில்நுட்பம் பொருட்களை வாடிக்கையாளருக்கு அருகில் சேமிக்க உதவுவதாக தெரிவித்தார்.

AI மற்றும் ரோபோக்களின் பங்கு

அமேசான் 2020 முதல் டிரான்ஸ்ஃபார்மர் அடிப்படையிலான AI மாதிரிகளைப் பயன்படுத்துகிறது. இது தேவையை கணிப்பதையும் விநியோகச் சங்கிலியை நிர்வகிப்பதையும் எளிதாக்குகிறது. இந்த தொழில்நுட்பம் கிடங்கில் பணிபுரியும் ரோபோக்கள் சரியான திசையில் செல்லவும் மோதல்களைத் தவிர்க்கவும் உதவுகிறது.

இப்போது நிறுவனம் மற்ற நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மனித உருவ ரோபோக்களையும் சோதித்து வருகிறது. ஆனால் அமேசான் ஹ்யுமனாய்டுகளுக்கான சிறப்பு மென்பொருளையும் உருவாக்கி வருகிறது.

இதில் சில கவலைகளும் உள்ளன

இது ஒரு தொழில்நுட்ப முன்னேற்றம் என்றாலும், இது குறித்த சில கலவைகளும் உள்ளன. மிகப்பெரிய கேள்வி என்னவென்றால்: ரோபோக்கள் மனிதர்களுக்கு மாற்றாக வந்துவிடுமா? 2021 மற்றும் 2023 க்கு இடையில் அமேசானின் கிடங்கில் உள்ள ரோபோக்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக CNBC அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இன்னும் அதிக எண்ணிக்கையிலான மனிதர்கள் தங்கள் வேலைகளை இழக்க நேரிடலாம் என்ற என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.

இது தவிர, AI அமைப்புகள் இயங்குவதற்கு அதிக அளவு மின்சாரம் தேவைப்படுகிறது, இது சுற்றுச்சூழலைப் பாதிக்கும்.

சவால்கள் நிறைந்த எதிர்காலம்

சில சவால்கள் இருந்தாலும், எதிர்காலம் தொழில்நுட்ப மேம்பாடு சார்ந்ததாக இருப்பதாக அமேசான் நம்புகிறது. மனித ரோபோக்களை சோதிப்பது அதன் அடுத்த பெரிய நடவடிக்கையாக இருக்கலாம். இது விநியோக அமைப்பை இன்னும் வேகமாக்கும். ஆனால் இது மனித தொழிலாளர்கள் மீது என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை நினைத்தால், இப்படிப்பட்ட தொழில்நுட்ப மேம்பாடு தேவைதானா என்ற கேள்வி மேலோங்குகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.