சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அடுத்த மாமல்லபுரம் அருகே கோத்ரெஜ் தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்கி வைத்தார். அப்போது, இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில், மாமல்லபுரத்தை அடுத்த குண்ணப்பட்டு பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் ரூ. 515 கோடி முதலீட்டில், 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவன தொழிற்சாலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உற்பத்தியை தொடங்கிவைத்து, கல்வெட்டையும் திறந்து வைத்தார். இதையடுத்து, நிகழ்ச்சியில், உரையாற்றிய முதல்வர் […]
