ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? புது அப்டேட்

How to Apply for a Voter ID Card Online in India : இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதில் மிகப்பெரிய அப்டேட்டைக் கொண்டு வந்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் அப்டேட் இருந்து அதனை மேற்கொள்பவர்களுக்கு, புதிய வாக்காளர் அடையாள அட்டையை 15 நாட்களில் பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதாவது, வாக்காளர்களுக்கு விரைவாகவும் திறம்படவும் சேவை வழங்குவதற்காக, வாக்காளர் பட்டியலில் அப்டேட் செயயப்பட்ட 15 நாட்களுக்குள் Electors’ Photo Identity Card (EPIC) வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. தற்போது, EPIC அட்டை வழங்க 1 மாதத்திற்கும் மேலாக ஆகிறது. இதனை மாற்ற இப்போது புது அப்டேட் வந்திருக்கிறது.

எனவே, வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் அப்டேட் இருந்தால் இனி வரும் நாட்களில் அப்டேட் செய்து புதிய கார்டை 15 நாட்களிலேயே பெற்றுக் கொள்ள முடியும். இதுதவிர முக்கிய ஆவணங்களில் ஒன்றாகவும் வாக்காளர் அடையாள அட்டை இந்தியாவில் உள்ளது. அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கு இந்த கார்டை நீங்கள் ஆவணமாக கொடுக்க முடியும். இதுதொடர்பான ஏதேனும் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்பவர்களுக்கும் இனி இந்த அப்டேட் வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.

ஆன்லைனில் வோட்டர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் முறை:

 – NVSP போர்டலுக்குச் செல்லவும்: National Voters’ Services Portal (NVSP) வலைத்தளத்தைத் திறக்கவும்.
 -புதிய கணக்கை உருவாக்கவும்: “Sign-Up” என்பதைக் கிளிக் செய்து, உங்கள் மொபைல் எண், மின்னஞ்சல் மற்றும் கேப்சா குறியீட்டை உள்ளிடவும்.
– OTP சரிபார்ப்பு: உங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ உள்ளிடவும்.
– உள்நுழையவும்: உங்கள் மொபைல் எண், பாஸ்வேர்ட் மற்றும் கேப்சா குறியீட்டைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
– படிவம் 6-ஐ நிரப்பவும்: புதிய வாக்காளர் பதிவுக்கு “Fill Form 6” என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் விவரங்களை உள்ளிடவும்.
– ஆவணங்களை அப்லோட் செய்யவும்: தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

வோட்டர் அடையாள அட்டை விண்ணப்ப நிலையைக் கண்காணிக்க:

– NVSP போர்டலுக்குச் செல்லவும்.
– “Track Application Status” பகுதியில் உங்கள் Reference Number (படிவம் 6/6A சமர்ப்பித்த பிறகு கிடைக்கும்) மற்றும் மாநிலத்தை உள்ளிடவும்.
– Submit கிளிக் செய்து, உங்கள் விண்ணப்ப நிலையைப் பார்க்கவும்.

இந்த புதிய முயற்சியால் வாக்காளர்கள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களின் EPIC அட்டையைப் பெறலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.