RJB: 'RJ பாலாஜி to RJB' – "பெயரை மாற்றக் காரணம் இதுதான்" – ஆர்.ஜே.பாலாஜி ஷேரிங்ஸ்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 45வது படத்திற்கு ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ போன்ற பாடல்களை இசையமைத்து வைரலான சாய் அபியங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இப்படத்திற்கு ‘கருப்பு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கருப்ப சாமியின் அரிவாள், வேல் முன்பு அரிவாள் ஏந்தியபடி சூர்யா நிற்கும் போஸ்டர் ஆர்.ஜே பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

இதற்கு முன் ஆர்.ஜே.பாலாஜி என்று வைக்கப்பட்டிருந்தது ஆர்.ஜே.பாலாஜியின் பெயர், இந்தப் போஸ்டரில் ‘RJB’ என மாற்றப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விகடன் எக்ஸ்குளூசிவ் பிரஸ்மீட்டில் பேசியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, “ஊர்வசி மேம் எனக்குக் கால் பண்ணி ஆர்.ஜே.பாலாஜினு போடாத. ‘RJB’னு போடுனு சொன்னாங்க.

பெரியவங்க பெயரெல்லாம் சொல்லி, ‘அவங்க பெயரெல்லாம் மூனு எழுத்து. அதுமாதிரி நீயும் வச்சுக்கோ. அடுத்தப் படத்தில இருந்து பெயர மாத்திடு’னு சொன்னாங்க.

நியூமராலஜி படி ஊர்வசி மேம் சொல்றதும் சரியாதான் இருக்குனு எனக்கும் தோனுச்சு. ஆனா.. கொஞ்சம் எனக்குக் கூச்சமும் தயக்கமும் இருந்துச்சு. அடுத்தப் படத்துல இருந்து ‘RJB’ னு மாத்திடலாம்” என்று பேசியிருந்தார்.

அவர் நேர்காணலில் சொன்னபடியே சூர்யாவின் ‘கருப்பு’ படத்தில் ‘RJB’ என்று மாற்றியிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.