சென்னை: 2024 டிசம்பர் மாதத்திற்குள் கட்டப்பட்டு வரும் 7,212 அடுக்குமாடி குடியிருப்புகள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் […]
