அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம்

புதுடெல்லி,

அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மதியம் 11.03 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 5.97 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.10 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. முன்னதாக கடந்த 25ம் தேதியில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.